புதுடில்லி: 2017ல் தென்மேற்கு பருவமழை, தென்னிந்தியாவில் சராசரிக்கும் குறைவாகவே மழை பெய்யும் என்று தனியார் வானிலை அறிவிப்பு மையம் ஸ்கைமெட் அறிக்கை விடுத்துள்ளது.
விவசாயம் பாதிப்பு:
கடந்த ஆண்டு (2016) நாட்டின் பல பகுதிகளில் தென்மேற்கு பருவமழை குறைவாக இருந்ததால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது. கடந்த 1951 முதல் 2000 வரையிலான இடைப்பட்ட வருடங்களில் நாட்டில் சராசரி தென்மேற்கு மழை 89 செ.மீ., ஆக இருந்தது. இந்தாண்டு (2017) நாட்டின் தென்மாநிலங்களில் 89 செ.மீ,., க்கும் குறைவாகவே மழை பெய்யும் என்று ஸ்கைமெட் அறிவித்துள்ளது.
வடமாநிலங்களில் நல்ல மழை:
தென் மாநிலங்களான தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்றவற்றில் இந்தாண்டு சராசரிக்கும் குறைவாகவே தென்மேற்கு பருவமழை பெய்ய வாய்ப்புள்ளது. இருப்பினும் மகாராஷ்டிரா, ஹரியானா, குஜராத், மேற்கு வங்க மாநிலங்களில், நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளது, இவவாறு ஸ்கைமெட் தனியார் வானிலை அறிவிப்பு மையம் மேலும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.