பெங்களூரு : மக்கள் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், சர்ச்சைக்குரிய இரும்பு மேம்பால பணிகளை கர்நாடக அரசு நிறுத்தி உள்ளது.
சர்ச்சை மேம்பாலம் :
கர்நாடகாவில் முக்கிய பிரமுகர்கள் மற்றும் தலைவர்கள் மட்டும் எந்த போக்குவரத்து இடையூறும் இன்றி செல்வதற்காக ரூ.2100 கோடி செலவில் இரும்பு மேம்பாலம் அமைக்க கர்நாடக அரசு திட்டமிட்டிருந்தது. பல்லாரியில் இருந்து கேம்பிகவுடா விமான நிலையம் வரை இந்த இரும்பு மேம்பாலம் அமைக்கப்பட இருந்தது. இந்த திட்டத்தில் பல கோடி அளவிற்கு ஊழல் நடந்ததாக சர்ச்சை எழுந்தது.
இந்த திட்டத்திற்காக அவ்வழியில் இருக்கும் சுமார் 800 க்கும் மேற்பட்ட மரங்களை அகற்றவும் திட்டமிடப்பட்டிருந்தது. இத்திட்டத்திற்கு மக்களிடம் கடும் எதிர்ப்பு எழுந்தது. தொடர் போராட்டங்களும் நடத்தப்பட்டு வந்தது. மக்களின் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, இத்திட்டத்தை கைவிட வேண்டும் என ஆளும் காங்., தலைவர்கள் பலர் முதல்வர் சித்தராமைய்யாவிடம் தெரிவித்தனர். இத்திட்டத்தை நிறைவேற்றினால் வரும் தேர்தலில், தங்களின் கட்சிக்கு அது மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் சித்தராமைய்யாவிடம் கூறி உள்ளனர்.
இதனையடுத்து இரும்பு மேம்பால பணிகளை கைவிடுவதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது. இது மக்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது.
English summary:
Bangalore: People struggle raging, the Karnataka government has suspended the controversial steel flyovers tasks