சென்னை: சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை:
தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் லட்சத்தீவு அருகே காற்றழுத்த தாழ்வு நிலை மையம் கொண்டுள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உண்டு. சில இடங்களில் இடியுடன் கூடிய சூறாவளி காற்று வீசக்கூடும்.கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மதுரை, சோழவந்தானில் 16 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.