சென்னை: இடைப்பாடி பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பு விவகாரத்தில் சபாநாயகர் முடிவை எதிர்த்து தி.மு.க., செயல்தலைவர் ஸ்டாலின் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கில், சட்டசபை செயலாளர் தாக்கல் செய்த பதில் மனு: சட்டசபை விதியில் ரகசிய ஓட்டெடுப்பு நடத்த விதியில்லை. விதிமுறைப்படி டிவிசன் ஓட்டெடுப்பு தான் நடத்தப்பட்டது. சட்டசபையில் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் அமளியில் ஈடுபட்டதால் தான் வெளியேற்றப்பட்டனர். ஸ்டாலின் கார் சோதனை செய்யப்பட்டது தொடர்பாக இதுவரை புகார் வரவில்லை. இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அவகாசம்:இந்த வழக்கு விசாரணையின்போது, நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு பின் வெளியேற்றப்பட்டது குறித்து பதில் மனு தாக்கல் செய்ய சட்டசபை செயலாளருக்கும், விளக்கமளிக்க ஸ்டாலினுக்கும் ஐகோர்ட் உத்தரவிட்டது. மேலும் சட்டசபையில் பதிவான காட்சிகள் அடங்கிய சிடியை ஸ்டாலின் மற்றும் வழக்கு தொட
ர்ந்தவர்களுக்கு வழங்கவும் ஐகோர்ட் உத்தரவிட்டது.
ர்ந்தவர்களுக்கு வழங்கவும் ஐகோர்ட் உத்தரவிட்டது.