வாஷிங்டன்: ஒரே ராக்கெட்டில் 104 செயற்கை கோள்களை ஏவி இந்தியா சாதனை படைத்த செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்ததாக அமெரிக்க உளவுப்பிரிவு இயக்குநர் டோம் கோட்ஸ் கூறியுள்ளார்.
சி.ஐ.ஏ., உள்ளிட்ட அமெரிக்க தேசிய புலனாய்வு பிரிவு இயக்குநராக, முன்னாள் செனட் உறுப்பினர் டான் கோட்ஸ் என்பவரை, அதிபர் டிரம்ப் பரிந்துரை செய்தார்.
இந்தியாவின் சாதனை தொடர்பாக அவர் கூறியதாவது: "ஒரே நேரத்தில் 104 செயற்கை கோள்களை விண்ணில் ஏவி இந்தியா சாதனை படைத்துள்ளது என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். இந்த விஷயத்தில் அமெரிக்கா பின்தங்கியுள்ளதாக கருத முடியாது. சிறிய அளவிலும், வெவ்வேறு செயல்பாடுகளை கொண்ட செயற்கை கோள்களை ஒரே ராக்கெட்டில் அனுப்ப முடியும்." இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த மாதம், ஸ்ரீஹரிக்கோட்டா சதிஸ் தவான் விண்வெளி நிலையத்திலிருந்து பி.எஸ்.எல்.வி-சி.37 ராக்கெட் மூலம் 104 செயற்கை கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி இஸ்ரோ சாதனை படைத்தது
English Summary:
Washington: 104 satellites on a single rocket was shocked at the news that record activator India Dome of US intelligence director said Coates.