பெங்களூரு : பெங்களூருவில் மக்கள் தொகை அதிகரித்து வருவதால், அதற்கு மாற்றாக புதிய தொழில் நகரத்தை கர்நாடக அரசு உருவாக்க உள்ளது.
விரைவில் புதிய நகரம் :
பெங்களூருவுக்கு மாற்றாக கோலார் கோல்ட் பீல்ட்ஸ் (கேஜிஎப்) என்ற நகரத்தை 11,000 ஏக்கர் பரப்பளவில் உருவாக்க உள்ளது. பெங்களூருவில் இருக்கும் 20 லட்சம் பேரை இந்த புதிய நகரத்திற்கு மாற்றவும் கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இந்த புதிய நகரின் குடிநீர் தேவைக்காக, மங்களூருவில் கடல்நீரை குடிநீராக்கும் சுத்தீகரிப்பு ஆலை ஒன்றை நிறுவி, அங்கிருந்து குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட உள்ளது.
பணிகள் தீவிரம் :
உலகரத்தரம் வாய்ந்த நிபுணர்களைக் கொண்டு இந்த நகரம் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இந்த புதிய நகருக்கான மாதிரி வடிவம் தயார் செய்யப்பட்ட பிறகு, இதற்கான செலவு குறித்து முடிவு செய்யப்படும் என கூறப்படுகிறது. இந்த புதிய நகரத்திற்காக பாரத் கோல்ட் மைன்ஸ் லிமிடெட்டின் நிலத்தை வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக கர்நாடக நகர வளர்ச்சி துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த புதிய நகரம் மற்றும் கர்நாடகாவின் முக்கிய நகரங்களின் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ரூ.3500 கோடி செலவில் 4 கடல்நீர் சுத்திகரிப்பு ஆலையை அமைக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.
இத்திட்டத்திற்காக ஆசிய வளர்ச்சி வங்கியிடம் இருந்து ரூ.400 கோடி கடன் வாங்குவதற்கான நடவடிக்கையையும் கர்நாடக அரசு விரைவில் துவக்க உள்ளது. புதிய நகரம் மற்றும் சுத்திகரிப்பு ஆலைகளுக்கான திட்டங்களுக்கு கர்நாடக அமைச்சரவை விரைவில் ஒப்புதல் வழங்க உள்ளது.
English summary:
Bangalore: Bangalore is the increase in population, but rather the city in Karnataka state, is to create new jobs.