புதுடில்லி : மார்ச் 31 ம் தேதிக்குள் அனைத்து வங்கிக் கணக்குகளிலும் நெட் பேங்கிங் வசதி செய்து தர வேண்டும் என வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
டிஜிட்டல் பரிவர்த்தனை:
மேலும் டிஜிட்டல் பரிவர்த்தனை மற்றும் ஆன்லைன் பரிவர்த்தனை செய்வதற்கு ஏற்றவாறு அனைத்து வங்கிக் கணக்குகளையும் ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரிக்கும் எனவும், ஆன்லைன் மூலம் வாடிக்கையாளர்கள் உலக அளவில் ஆன்லைன் மூலம் பரிவர்த்தனை செய்ய முடியும் எனவும் மத்திய தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரிக்கும் வகையில் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதுவரை 35 சதவீதம் வங்கி கணக்குகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்படவில்லை என தொழில்நுட்பத்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நெட்பேங்கிங் வசதி இல்லாதவர்கள் ஆன்லைன் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனை மேற்கொள்ள முடியாது. இதன் காரணமாகவே அனைத்து வங்கி கணக்குகளுக்கு நெட் பேங்கிங் வசதி செய்து வர உத்தரவிட்டுள்ளோம் என தெரிவித்துள்ளனர்.
English summary:
NEW DELHI: All the bank accounts by March 31, Net banking facility, the central government has ordered banks that need to be doing.