புதுடில்லி: 'செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு பற்றி, நிதியமைச்சரிடம் ஆலோசிக்கப்பட்டதா' என, ஆர்.டி.ஐ., எனப்படும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு, பதில் அளிக்க, மத்திய நிதியமைச்சகம் மறுத்து விட்டது.
ஆர்.டி.ஐ., சட்டம்:
பிரதமர் மோடி, பழைய, 1,000 - 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த ஆண்டு, நவம்பர், 8ல், அறிவித்தார். 'இந்த அறிவிப்புக்கு முன், இது பற்றி, மத்திய நிதியமைச்சர் மற்றும் தலைமை பொருளாதார ஆலோசகரிடம் ஆலோசிக்கப்பட்டதா' என, ரிசர்வ் வங்கி மற்றும் பிரதமர் அலுவலகத்திடம், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், சிலர் கேள்வி எழுப்பியிருந்தனர். ஆனால், 'செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு குறித்த விபரங்களை, ஆர்.டி.ஐ., சட்டத்தின் கீழ் தெரிவிக்க முடியாது' என, ரிசர்வ் வங்கியும், பிரதமர் அலுவலகமும் மறுத்து விட்டன.
பதில் கூற மறுப்பு:
இந்நிலையில், மத்திய நிதியமைச்சகத்துக்கு, பி.டி.ஐ., செய்தி நிறுவனம், ஆர்.டி.ஐ.,யின் கீழ் கேட்டிருந்த கேள்வியில், 'செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு முன், இது பற்றி மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியிடம் ஆலோசிக்கப்பட்டதா' என, கேட்கப்பட்டிருந்தது. ஆனால், இதற்கு பதில் அளிக்க, மத்தியநிதியமைச்சகம் மறுத்து விட்டது.
இது தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் அனுப்பியுள்ள பதிலில் கூறியுள்ளதாவது: செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு முன் நடத்தப்பட்ட ஆலோசனைகள் தொடர்பான ஆவணங்கள் உள்ளன. ஆனால், இவை, ஆர்.டி.ஐ., கீழ் வராது; அதனால், அந்த தகவல்களை தெரிவிக்க முடியாது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
English summary:
NEW DELHI : 'Invalid currency note about the announcement, Finance Minister decoration to as' artiai, which, under the RTI Act, question, answer, the finance ministry has refused.