சென்னை: மார்ச் 1. தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் பிறந்த தினம். இந்த தினத்திற்கு, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும், தி.மு.க., தொண்டர்கள் பெரும் திரளாக சென்னை வந்து, அவரை வாழ்த்தி விட்டு, திரும்பிச் செல்வது வாடிக்கை.
இந்தாண்டு, அவர், கட்சியின் பொருளாளர் நிலையில் இருந்து செயல்தலைவர் பதவிக்கு உயர்ந்து விட்டதால், கடந்த ஆண்டு பிறந்த நாளை விட, கூடுதல் எண்ணிக்கையில் தொண்டர்கள் வருவர் என்று எதிர்பார்த்து காத்திருந்தார் ஸ்டாலின். ஆனால், வழக்கமான மாற்றுக் கட்சித் தலைவர்களும், கட்சியின் முக்கிய நிர்வாகிகள், வி.ஐ.பி.,க்கள் மட்டுமே அதிக அளவில், ஸ்டாலினை, நேரிலும் போனிலும் வாழ்த்தினர்.
ஆர்வம் குறைந்தது?:
இது குறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: தலைவர்களின் பிறந்த நாள் விழாக்களுக்கு, முன்பு போல கூடும் தொண்டர்கள் கூட்டம், சமீப காலமாக எல்லா தலைவர்களுக்கும் சரிந்துதான் வருகிறது. ஜெயலலிதா இறந்த பின் வந்த முதல் பிறந்த நாளுக்கே, அ.தி.மு.க., தொண்டர்கள் மத்தியில் எழுச்சி இல்லை. பணம் கொடுத்து, ஆட்களை கூட்டி வந்துதான், நலத் திட்ட உதவிகளையும்; பொதுக்கூட்டங்களையும், மாவட்ட செயலர்களும்; அமைச்சர்களும் நடத்தினர்.
அவர்களுக்கே நிலைமை அப்படித்தான் என்கிற போது, தி.மு.க.,வில் மட்டும், தொண்டர்கள், ஸ்டாலினுக்காக கிளர்ந்து எழுந்து வாழ்த்து தெரிவிக்க வந்து விடுவார்களா? இதே, தி.மு.க., ஆட்சி இருந்து, ஸ்டாலின் முதல்வராக இருந்தால், காரியம் சாதிக்கும் எண்ணத்துடன், தொண்டர்கள் பெரும் அளவில் கிளம்பி வந்திருப்பர். இதுதான் யதார்த்தம். அதை விட்டு விட்டு, நான் இவ்வளவு தொண்டர்களை எதிர்பார்த்தேன். அதில் பத்து சதவீத அளவுக்குக் கூட வரவில்லை என்று ஸ்டாலின் புலம்ப தேவையில்லை.
இன்றைய நுகர்வு கலாச்சாரத்தில், அவசர உலகில், இந்த அளவுக்கு குறைந்த எண்ணிக்கையிலாவது, தொண்டர்கள் தன்னிச்சையாக வருவதற்காக, ஸ்டாலினும், அவரது குடும்பத்தாரும் சந்தோஷம்தான் பட வேண்டும். அதற்காக வருத்தப்படவோ, கலங்கவோ கூடாது.இவ்வாறு, அக்கட்சி வட்டாரங்கள் கூறின.
English summary:
Archives: March 1. The DMK leader Stalin's Birthday Adventure. This Day, from all the districts of Tamil Nadu, the DMK, the mass of volunteers arrived in Chennai to salute him, leaving the client to go back.