சென்னை - டெல்லி சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, வெங்கையா நாயுடு, ரவிசங்கர் பிரசாத் ஆகியோரை சந்தித்து தமிழக திட்டங்கள் குறித்து ஆய்வு நடத்தினார்.
பிரதமருடன் சந்திப்பு:
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை நேற்று முன்தினம் சந்தித்துப் பேசிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி, தமிழக நலன் சார்ந்த கோரிக்கைகள் அடங்கிய 106 பக்க மனுவினை அளித்தார். ஏழை - எளிய, கிராமப்புற மாணவ மாணவியரை பெரிதும் பாதிக்கும் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் சட்டமுன் வடிவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் - தஞ்சாவூரில் எய்ம்ஸ் மருத்துவமனையை விரைவில் அமைக்க வேண்டும் - தமிழகத்திற்கு வறட்சி நிவாரண நிதியாக 39 ஆயிரத்து 566 கோடி ரூபாய் - வர்தா புயல் நிவாரண நிதியாக 22 ஆயிரத்து 573 கோடி ரூபாய் - மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் மூலமாக தமிழகத்திற்கு அளிக்க வேண்டிய நிதி 17 ஆயிரத்து 333 கோடி ரூபாய் ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள், முதலமைச்சரின் மனுவில் இடம்பெற்றுள்ளன.
அமைச்சர்களுடன் சந்திப்பு:
இந்த நிலையில் நேற்று காலை டில்லியில் மத்திய நகர்ப்புற மேம்பாடு, வீட்டுவசதி, மற்றும வறுமை ஒழிப்பு திட்டங்கள் அமைச்சர் வெங்கையா நாயுடுவை சந்தித்து ஆய்வு மேற்கொண்டார், இந்த ஆய்வில் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, நிதி அமைச்சர் ஜெயகுமார், வீட்டுவசதித்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், திருவள்ளுர் எம்.பி.வேணுகோபால், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், நிதித்துறை செயலாளர் சண்முகம், திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை செயலாளர் கிருஷ்ணன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி, தகவல்தொழில்நுட்பத்துறை செயலாளர் டி.கே.ராமசந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.