புதுடில்லி: ராணுவத்தில், 20 ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டு பயன்பாட்டில் உள்ள, 'இன்சாஸ்' எனப்படும், இந்திய சிறிய ரக துப்பாக்கிகளுக்கு மாற்றாக, புதிய நவீன துப்பாக்கிகளை அறிமுகம் செய்ய, திட்டமிடப்பட்டுள்ளது.
இன்சாஸ் துப்பாக்கி:
ராணுவத்தில், குறிப்பாக, எல்லை பாதுகாப்பு பணியில் உள்ளவர்களுக்கு, இன்சாஸ் எனப்படும், இந்தியாவில் தயாரிக்கப்படும், இந்திய சிறிய துப்பாக்கிகள் வழங்கப்படுகின்றன. கடந்த, 1998ல் அறிமுகம் செய்யப்பட்டு, இரண்டு லட்சம் இன்சாஸ் துப்பாக்கிகள் தற்போது பயன்பாட்டில் உள்ளன.
வசதிகள் இல்லை:
மிகக் குறைந்த துாரத்தில் உள்ள இலக்கை தாக்கும் திறன் உள்ளிட்ட வசதிகள் இந்த துப்பாக்கியில் இல்லை. அதனால், புதிய நவீன ரக துப்பாக்கிகளை ராணுவத்துக்கு வழங்க, ராணுவ அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. தற்போது, பாகிஸ்தான் ராணுவத்தில் பயன்படுத்தப்படும் இந்த ரக துப்பாக்கிகளை, இந்தியாவிலேயே தயாரிக்கும் வகையில், ஒப்பந்தங்கள் கோரப்பட்டுள்ளன. இதற்கான ஒப்பந்தத்தில், 18 இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.
நிபந்தனை:
இந்த ஆயுதத் தயாரிப்பில் ஈடுபடும் வெளிநாட்டு நிறுவனங்கள், ஒப்பந்தம் கிடைத்தால், தொழில்நுட்ப தகவல்களை பரிமாறிக் கொள்ள வேண்டும்; மேலும், உள்நாட்டிலேயே தயாரிக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது இதற்கான பணிகள் ஆரம்ப நிலையில் உள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள், இப்பணிகள் முடிந்து, வரும், 2018ல் இருந்து, இந்த நவீன ரக துப்பாக்கிகள் பயன்பாட்டு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
English summary:
NEW DELHI: Army, was introduced 20 years ago in the application, 'incas' or, as an alternative to the Indian small rifles, revolvers, to introduce new modern, planned.