பெங்களூரு : 'பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை, துமகூரு மகளிர் மத்திய சிறைக்கு மாற்ற வேண்டும்; அவரை பார்த்த நான்கு அமைச்சர்களையும் பதவி நீக்கம் செய்ய வேண்டும்' என, கர்நாடக ஐகோர்ட்டில், 'டிராபிக்' ராமசாமி வழக்கு தொடர்ந்து உள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில், சசிகலா அடைக்கப்பட்டு உள்ளார்.
அவரை, தமிழகத்தின் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், சுகாதாரத் துறை அமைச்சர் காமராஜ், கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லுார் கே.ராஜு ஆகியோர், சமீபத்தில், சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
'வழக்கில் தண்டனை பெற்று, சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை நான்கு அமைச்சர்கள் சந்தித்து பேசியது, சட்டப்படி தவறு' என, பலரும் கருத்து தெரிவித்து இருந்தனர்.இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த, சமூக ஆர்வலர், 'டிராபிக்' ராமசாமி சார்பில், கர்நாடக ஐகோர்ட்டில், பொதுநல மனு ஒன்றை, அவரது வழக்கறிஞர்கள் அரவிந்தன், சாஜி ஆகியோர் தாக்கல் செய்தனர்.
மனுவில் குறிப் பிட்டுள்ளதாவது:
● சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை, சட்டத்தை மீறி சந்தித்த நான்கு அமைச்சர்களையும் பதவி நீக்கம் செய்ய வேண்டும்
● தமிழகம் உட்பட, எந்த மாநிலத்திலிருந்தும் அவரை சந்திக்க தடை விதிக்க வேண்டும்
● பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து, துமகூரு மகளிர் மத்திய சிறைக்கு அவரை மாற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இம்மனு மீதான விசாரணை, 9ம் தேதி, கர்நாடக தலைமை நீதிபதி முன்னிலையில் வரலாம் என, எதிர்ப்பார்க்கப்படுகிறது.
English Summary:
'Parappana akrahara jailed Sasikala, Thumakuru want to change federal prison for women; I saw him to be sacked four ministers, "the Karnataka High Court, 'Traffic' Ramasamy is following suit. akrahara jailed Sasikala, tumakuru want to change federal prison for women; I saw him to be sacked four ministers, "the Karnataka High Court, 'Traffic' Ramasamy is following suit.