புதுடில்லி: பிறந்து 8 நாட்களேயான பச்சிளம் குழந்தை உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நேரத்தில், மருத்துவமனையில் சரியான நேரத்தில் அனுமதிக்க பிரதமர் மோடி உதவி செய்து குழந்தையின் உயிரை காப்பாற்றினார்.
அசாமைச் சேர்ந்த கலிதா-ஹிமாக்ஷி தம்பதியினருக்கு எட்டு நாட்களுக்கு முன்னர் குழந்தை பிறந்தது.ஆனால் குழந்தையின் உடலிலிருந்து முதன்முறையாக வெளியாகும் கழிவு, அதன் நுரையீரலில் கலந்தது.
இந்நிலையில், அந்த குழந்தை மூச்சு விட திணறியது.கடந்த சில நாட்களாக சிகிச்சை அளித்து வந்த அசாம் மருத்துவர்கள்,குழந்தையின் உடல் நிலை மோசமானதால், உடனடியாக டில்லியில் உள்ள மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்கு குழந்தையை அனுமதிக்க அறிவுறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து நேற்று முன் தினம்(மார்ச்-4 அன்று) ஹெலிகாப்டர் மூலமாக அந்த எட்டு நாள் குழந்தை அசாமிலிருந்து டில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்வது குறித்து முன்னதாகவே பிரதமர் மோடிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
நிலைமையை புரிந்து கொண்ட பிரதமர் மோடி, குழந்தையை விரைவாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வகையில் , ஆம்புலன்ஸ் செல்லும் சாலையில் போக்குவரத்தை நிறுத்த உத்தரவிட்டார். இதனால் சரியான நேரத்தில் சாலை வழியாக டில்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனைக்கு குழந்தை கொண்டு செல்லப்பட்டது.
மோடிக்கு பெற்றோர் நன்றி:
இந்நிலையில் நேற்று (மார்ச்-5) அந்த குழந்தை ஆபத்துக் கட்டத்தை தாண்டிவிட்டதாகவும், உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் தங்கள் குழந்தையை காப்பாற்றிய தெய்வம் மோடி என அந்த குழந்தையின் பெற்றோர் தங்களது நன்றியை தெரிவித்துள்ளார்கள்.

English summary:
New Delhi, was fighting for his life at the time of birth 8 days newborn baby, the hospital in time to allow the Prime Minister to help save a child's life.