லக்னோ: மோடி அரசு பணக்காரர்களின் கடன்கள் மட்டுமே ரத்து செய்கிறது என, காங்., துணைத்தலைவர் ராகுல் குற்றம் சாட்டினார்.
உ.பி., மாநிலத்தில் நடந்து வரும் சட்டசபைத் தேர்தலிலின் இறுதி கட்ட ஓட்டுப்பதிவு மார்ச் 8ம் தேதி நடக்க உள்ளது. இதையொட்டி காங்., துணைத் தலைவர் ராகுல், சோன்பத்ரா நகரில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசினார்.
பணக்காரர்களுக்களின் கடன் தள்ளுபடி:
அவர் கூறியதாவது: நான் மோடி அரசிடம், விவசாயிகள் மீதான ரூ 50,000 கோடி கடனை ரத்து செய்ய கோரிக்கை விடுத்தேன். அதற்கு எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐ.மு., கூட்டணி அரசு ஆட்சி அமைத்ததும் ரூ 70,000 கோடி வரையில் விவசாயிகள் கடனை ரத்து செய்தது. ஆனால் மோடி அரசு இந்தியாவின் பெரும் பணக்காரர்களின் ரூ1,40 லட்சம் கோடி கடனை மட்டுமே ரத்து செய்து உள்ளது.
நிறைவேறாத வாக்குறுதி:
பிரதமர் மோடி, பா.ஜ., ஆட்சிக்கு வந்ததும் ஆண்டுதோறும் 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் இதுவரை வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. விவசாயிகளின் விளை பொருட்களுக்கு நியாயமான விலை கிடைப்பதில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
English summary:
Lucknow: The Modi government only cancels the debts of the rich, as Cong., Vice President Rahul alleged. UP assembly election in the state of the ongoing final phase of voting is scheduled for March 8. The Cong., Rahul, Sonbhadra spoke at a meeting of the campaign in the city.