லக்னோ: மாயாவதியுடன் கூட்டணி அமைக்க தயாராக உள்ளதாக அகிலேஷ் கூறியுள்ள நிலையில், தற்போதைக்கு கூட்டணி குறித்து சிந்திக்கவில்லை என பகுஜன் சமாஜ் கட்சி வட்டாரங்கள் கூறியுள்ளன.
உ.பி., கருத்துக்கணிப்பில் பா.ஜ.,வுக்கு சாதகமாக உள்ளன. இதனையடுத்து அதிர்ச்சியடைந்த அகிலேஷ் யாதவ், பா.ஜ., ஆட்சிக்கு வருவதை தடுக்க, தேவைப்பட்டால், பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைப்போம் எனக்கூறியிருந்தார்.திரிணாாமுல் மறுப்பு : இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: தற்போதைய நிலையில், ஓட்டு எண்ணிக்கை முடிவுக்காக காத்திருக்கிறோம். யாருடனும் கூட்டணி அமைப்பது பற்றி தற்போது சிந்திக்கவில்லை. இவ்வாறு தெரிவித்தன. இதனிடையே, மாயாவதி மற்றும் அகிலேசுடன் மம்தா பேச்சு நடத்துவதாக வெளியான தகவலை திரிணமுல் மறுத்துள்ளது. யாருடனும் மம்தா பேசவில்லை எனவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
English summary:
Lucknow: Akhilesh said it is ready to form an alliance with Mayawati, the Bahujan Samaj Party, for now, sources said they were not thinking of the coalition.