சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் களம் கடும் சூடாகி இருக்கிறது. தி.மு.க., வேட்பாளர் மருது கணேஷ் மற்றும் அ.தி.மு.க., புரட்சித் தலைவி அம்மா கட்சி சார்பில் போட்டியிடும் மதுசூதனன் ஆகியோர், தீவிர பிரசாரத்தில் இருக்கின்றனர்.
ஆனால், எப்படியாவது வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற முனைப்பில், தொகுதியில் மற்றவர்களைக் காட்டிலும் பம்பரமாக சுழன்று கொண்டிருக்கிறார் அ.தி.மு.க., அம்மா கட்சி வேட்பாளர், டி.டி.வி.தினகரன். அவரது ஆதரவாளர்களும், கட்சியினரும் கூட தீவிரமாக தேர்தல் வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
கேள்விக்குறி:
இருந்தும், தினகரனுக்கு வெற்றி கேள்விக்குறியாக இருப்பதால், ரொம்பவும் அச்சப்படுகிறார். அதனால், மொத்தமுள்ள 33 அமைச்சர்களையும் தொகுதிக்கு அனுப்பி தேர்தல் வேலை பார்த்து வருகிறார். இதனால், அங்கே பணம் தண்ணீராக செலவழிக்கப்படுகிறது. மக்களுக்கு கேட்டதெல்லாம் செய்து கொடுக்கும் நிலைக்கு நாம் வந்து விட்டால், மக்கள் நமக்குத்தான் ஓட்டளிப்பர் என, தினகரன் தரப்பு முடிவெடுத்து, அதற்கான காரியங்களில் இறங்கி தீவிரமாக வேலை செய்து வருகிறது.
பண விளையாட்டு:
ஆனால், இந்த விஷயம், தேர்தல் பார்வையாளருக்கு கட்டாயம் தெரிந்திருக்கிறது. அதனால், பண விளையாட்டு மூலம் ஜனநாயகத்தை முடக்கப் பார்க்கின்றனர் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளதால், தேர்தல் பார்வையாளர்கள் மூலம், அறிக்கை பெற்று, ஜனநாயகத்தின் குரல் வளையை நசுக்க விடமாட்டோம் என்று தேர்தல் கமிஷன் அதிகாரிகள் சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.
புகார்:
இந்நிலையில், தேர்தல் கமிஷன் நடத்தை விதிகள் உட்பட, பல்வேறு விஷயங்களை தி.மு.க., தரப்பில் படித்துக் கொண்டிருக்கின்றனர். விரைவில், ஆர்.கே.நகரில் பணநடமாட்டம் அதிகமாக உள்ளது என்று புகார் கொடுக்க உள்ளனர். மற்ற கட்சிகளும், இதே கருத்தை வலியுறுத்தி, தேர்தல் கமிஷனில் புகார் கொடுப்பர்.
தேர்தல் நிறுத்தம்?
அதை வைத்து, தேர்தல் நெருக்கத்தில், ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலை, தேர்தல் கமிஷன் நிறுத்தும் யோசனையில் உள்ளது. இதற்கு, சமீபத்திய உதாரணங்களாக, தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி தேர்தல்கள் இருப்பதால், அதே பாணியில், ஆர்.கே.நகர் தொகுதியிலும் தேர்தல் நிறுத்தப்பட கூடுதல் வாய்ப்புள்ளது.
பின்னடைவு:
இதையறிந்துள்ள அ.தி.மு.க., அம்மா தரப்பினர், கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இருந்தாலும், தேர்தலில் வெற்றி பெற கூடுதலாக உழைக்க வேண்டும் என தங்களுக்குள் கூறிக் கொண்டு, தொடர்ந்து அதிகார துஷ்பிரயோகத்திலும், சட்ட விரோதமாகவும் ஈடுபடுவது, தற்போதைய அரசைப் பாதிக்கிறது; அரசின் செயல்பாடுகளும் கடும் பாதிப்பை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என, வருவாய்த் துறை கீழ் நிலை அதிகாரமட்டங்கள் கூறுகின்றன. அ.தி.மு.க.,வைச் சேர்ந்த, இத்தகைய செயல்பாடுகள், அக்கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தலாம்.