திருகோணமலை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் பெருமளவில் அதிகரித்து வரும் நிலையில் கிண்ணியாவைச் சேர்ந்த பெண்ணொருவர் இன்று திருகோணமலை அரசினர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார் இந்த நிலையில் கிண்ணியா பிரதேசத்தில் டெங்குநோயால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது.
கிண்ணியா மாஞ்சோலைச்சேனையைச் சேர்ந்த ரியாத் நஸீபா என்பவரே இன்று அதிகாலை டெங்கு நோயின் தர்க்கத்தினால் உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில் டெங்கு தாக்கம் பாடசாலை மாணவர் மத்தியில் அதிகரித்து வரும் வேளை தனியார் கல்வி நிலையங்களில் பிரத்யேக கல்வி வகுப்புகள் என்பன தற்காலிகமாக இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலைலில் சுகாதாரப் பகுதியினர் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து துதி-திருகோணமலை நகரம் கிண்ணியா மற்றும் அதனை அடுத்துள்ள பகுதிகளில் வீதியோர வடிகான்கள் மற்றும் வீடு வீடாகவும் சென்று கொசு பரவும் சூழல் உள்ளதா என கண்காணித்து வருகின்றனர். கொசு பரவம் சூழல் காணப்படும் வீட்டு உரிமையாளர்கள் தனியார் நிறுவங்களின் உரிமையாளர்கள் மற்றும் ஏனையோர் வசிக்கும் இடங்களில் கொசு பரவும் சூழல் காணப்படின் சம்பந்தப்பட்டோர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன
இதேவேளை திருகோணமலை அரசினர் பொது மருத்துவ மனையில் தினமும் அதிக அளவிலான டெங்கு நோயாளிகள் சிகிச்சைக்கென வரும் நிலையில் இதற்கான உதவிகளை தனியார் நிறுனங்கள் ஆலய நிர்வாகங்கள் மற்றும் தனியார் தொண'டு நிறுவனங்களிடமிருந்தும் பெறுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளப்போவதாகவும் வைத்தியசாலை பணிப்பாளர் அனுஷியா ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
இதேவேளை டெங்கு நோய் தொடர்பான விழிப்புணர்வினை ஏற்படுத்துதற்கான வீதி நாடகங்களை நடத்தவும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.