புதுடில்லி: காஷ்மீர் வன்முறையை கட்டுப்படுத்த பயன்படுத்தப்பட்டு வரும் பெல்லட் துப்பாக்கியால் பெரும் காயங்கள் ஏற்படுவதால், அதில் மாற்றம் செய்ய துணை ராணுவம் முடிவு செய்துள்ளது.
காஷ்மீரில் கடந்த பல மாதங்களாக தொடர்ந்து வன்முறை வெடித்து வருகிறது. கலவரக்காரர்களை, உயிர்ச்சேதமில்லாமல் கட்டுப்படுத்த அதிக வலியை ஏற்படுத்தும் பெல்லட் துப்பாக்கிகள் பயன்படுத்தப்படுகின்றன.
உலோக தகடுகளால் காயம்:
பெல்லட் துப்பாக்கி குண்டுகளின் முனையில் உலோக தகடு பொருத்தப்பட்டிருக்கும். இந்த உலோக தகடு, முகம், கைகால்களில் படும் போது காயங்கள் ஏற்படுகின்றன. இதனால், தாக்கப்படுவோர் கடும் பாதிப்பிற்குள்ளாகின்றனர்.
காயத்தை குறைக்க திட்டம்:
இதை தடுக்கும் வகையில், பெல்லட் குண்டுகளின் முனையில் உலோக தகடுகளுக்கு பதிலாக, தசை போன்ற தன்மைகொண்ட ஒரு ரப்பரை பொறுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து சி.ஆர்.பி.எம்., ஜெனரல் துர்கா பிரசாத் கூறுகையில், ‛காயங்களை குறைக்கும் வகையில் பெல்லட் துப்பாக்கியில் சில மாற்றங்களை செய்ய உள்ளோம். மேலும், வன்முறையாளர்கள் மீது தாக்குதல் நடத்தும் போது, முட்டிக்கு கீழ் தான் பெல்லட் துப்பாக்கியால் சுட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. ' என்றார். காஷ்மீர் நிலவரம் குறித்து அவர் மேலும் கூறுகையில், ‛கடந்த ஆண்டை காட்டிலும் வன்முறைகள் குறைந்துள்ளன. துணை ராணுவத்தினர் மற்றும் போலீசார் மீது கல்லெறிந்து தாக்குவதும் குறைந்துள்ளது,' என்றார்.
மிளகாய் தூளும் உண்டு:
பெல்லட் துப்பாக்கிகள் மட்டுமல்லாது.பாவா எனப்படும் மிளகாய்தூளையும் ஆயுதமாக துணை ராணுவத்தினர் பயன்படுத்துகின்றனர். நிலவரத்தை பொறுத்து பெல்லட் துப்பாக்கிகள் அல்லது பாவா மிளகாய்தூளை பயன்படுத்துவதாக அதிகாரிகள் கூறி உள்ளனர்.

English Summary:
NEW DELHI: pellat Kashmir, which is used to control the violence, injuries caused by the gun, the army has decided to make the transition to auxiliary.