புதுடில்லி: ''தமிழகத்தில், 'பெப்சி' மற்றும் 'கோக கோலா' குளிர்பான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள செயல், நாட்டின் ஜனநாயக மாண்பிற்கு எதிரானது,'' என, மத்திய உணவு பதப்படுத்தல் துறை அமைச்சர், ஹர்சிம்ரத் கவுர் பாதல் தெரிவித்துள்ளார்.
அதிர்வலை:
தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தின்போது, அமெரிக்காவை சேர்ந்த, 'பீட்டா' அமைப்புக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, 'வெளிநாட்டு நிறுவன தயாரிப்புகளான, பெப்சி மற்றும் கோககோலா குளிர்பானங்களை இனி தமிழக வியாபாரிகள் விற்பனை செய்யமாட்டார்கள்' என, வர்த்தகர் சங்கங்களின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, இம்மாதம், 1 முதல், பெரும்பாலான கடைகளில், இந்த குளிர்பானங்கள் விற்பனை நிறுத்தப்பட்டது. இது, நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
ஏற்க முடியாது:
இதுகுறித்து, அகாலிதளம் கட்சியை சேர்ந்தவரும், மத்திய அமைச்சருமான, ஹர்சிம்ரத் கவுர் பாதல் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில், பெப்சி மற்றும் கோககோலா குளிர்பான விற்பனைக்கு தடை விதித்துள்ள வர்த்தகர் சங்கங்களின் செயல், நாட்டின் ஜனநாயக மாண்பிற்கு எதிரானது. நாட்டு மக்கள் அனைவருக்கும், தாங்கள் விரும்பும் உணவை உட்கொள்ள உரிமை உள்ளது. இதுபோன்ற செயல்கள், கள்ளச் சந்தை வியாபாரத்தை அதிகரிக்கும். எனவே, தமிழக வியாபாரிகளின் செயல் ஏற்க தகுந்தது அல்ல.இவ்வாறு அவர் கூறினார்.
English Summary:
NEW DELHI: '' Mavericks 'Pepsi' and 'Coca-Cola' drinks are banned for sale in the action against the country's democratic ", Union minister for food processing industry, harsimrat Kaur Badal