சென்னை : ரேஷன் கடைகளில், அத்தியாவசியப் பொருட்களை இருப்பு வைக்க, போர்க்கால நடவடிக்கை எடுக்க, அரசுக்கு உத்தரவிடக் கோரிய மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சென்னை, கொடுங்கையூரைச் சேர்ந்த சைமன் தாக்கல் செய்த மனு:தமிழகத்தில், 1.95 கோடி குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு, ரேஷன் கடைகளில் இலவச அரிசி, மண்ணெண்ணெய், சர்க்கரை, கோதுமை என, அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகின்றன.
தற்போது, ரேஷன் கடைகளில், அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதில்லை.கடை ஊழியர்களிடம் கேட்டால், 'அரசிடம் இருந்து பொருட்கள் வரவில்லை; வந்தால் தானே வினியோகிக்க முடியும்' என்கின்றனர். இதனால், ஊழியர்களுடன் மோதல் ஏற்படுகிறது.
இலவச அரிசி, 20 கிலோ வழங்கப்பட வேண்டும்; ஆனால், அளவு குறைக்கப்பட்டுள்ளது. முழுமையாக, 20 கிலோ அரிசி வழங்கப்படுவதில்லை. உணவுப் பொருட்களை வாங்குவதற்கான, 'டெண்டர்' கோர, முறையான நடவடிக்கை இல்லை.
மக்களுக்கு உணவு கிடைப்பதை உறுதி செய்வதற்காக, உணவு பாதுகாப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. எனவே, ரேஷன் கடைகளில், குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும், அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதற்கு, இருப்பு வைக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, தற்காலிக தலைமை நீதிபதி எச்.ஜி.ரமேஷ், நீதிபதி சுந்தர் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான, பிளீடர் எம்.கே.சுப்ரமணியன், 'பத்திரிகைகளில் வந்த செய்தி அடிப்படையில், மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது; பொது வினியோகத்தில், தமிழகம் முன்னோடி மாநிலமாக உள்ளது' என்றார்.
இதையடுத்து, மனு வை தள்ளுபடி செய்து, முதல் பெஞ்ச் உத்தரவிட்டது. அதில், 'போதிய தகவல்கள், புள்ளி விபரங்கள், மனுவில் இல்லை; பத்திரிகை செய்தி அடிப்படையில், மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது' என, கூறப்பட்டுள்ளது.
English summary:
Chennai outlet, to keep the balance of essential items, combat action, the State requested the petition order Madras High Court dismisses.