புதுடில்லி: ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக, தி.மு.க., எம்.பி.,க்கள் கனிமொழி மற்றும் திருச்சி சிவா ஆகியோர் டில்லியில் மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்து பேசினார்.
சந்திப்புக்குப் பின்னர், திருச்சி சிவா அளித்த பேட்டி:
மாநில அரசின் ஒத்துழைப்பு வேண்டும்
திமுக செயல்தலைவர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தை அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் அளித்தோம். அத்துடன் திட்டத்தை கைவிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியதையும் தெரிவித்தோம். ஆனால் நாட்டின் வளர்ச்சிக்காக இத்தகைய திட்டங்கள் பல்வேறு இடங்களில் செயல்படுத்தப்படும் நிலையில் இங்கு எதிர்ப்பு தெரிவிப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினார். ஆனால் விவசாயம் மற்றும் விவசாயிகளுக்கு இந்த திட்டத்தின் காரணமாக கடுமையான பாதிப்பு ஏற்படுவதாலும், நிலத்தடி நீர் முற்றிலுமாக அழிந்து போகும் அபாயத்தினாலும் இந்த திட்டத்தை நாங்கள் எதிர்க்கிறோம் என்பதை தெளிவு படுத்தினோம்.
அப்படி முக்கியமான திட்டம் என்று நீங்கள் கருதினால் திட்டம் பற்றி முழுமையாக மக்களிடம் தெளிவுபடுத்தி, அவர்களை மாற்ற முயற்சியுங்கள் என்றும் நாங்கள் தெரிவித்தோம்.
நாங்கள் கூறிய கருத்துக்களை பரிசீலிப்பதாக தெரிவித்த அமைச்சர், எந்த ஒரு திட்டமானாலும் மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லாமல் நிறைவேற்றப்படாது என்பதையும் தெளிவுபடுத்தினார்.
இவ்வாறு திருச்சி சிவா தெரிவித்தார்.