
சென்னை, தாம்பரத்தில் உள்ள, இந்திய விமானப்படை தளத்தில், சிறந்த வீரர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி, நாளை காலை(மார்ச் 3) நடக்கிறது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, வீரர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கிறார். அதற்காக அவர், இன்று இரவு, 8:05க்கு, கேரள மாநிலம், கொச்சியில் இருந்து, விமானப்படை விமானத்தில், சென்னை வருகிறார்.
நாளை...
பின், கிண்டி கவர்னர் மாளிகையில் தங்கும் அவர், நாளை(மார்ச் 3) காலை, 9:00 மணியில் இருந்து, 11:20 வரை, விமானப்படை வீரர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பின், மதியம், 12:00க்கு, அடையாறில், இந்திய பெண்கள் சங்க நுாற்றாண்டு விழாவில் பங்கேற்று விட்டு, பிற்பகல், 1:15க்கு, டில்லி புறப்பட்டு செல்கிறார்.
பலத்த பாதுகாப்பு:
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் வருகையை ஒட்டி, சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. தெற்கு மண்டல இணை கமிஷனர் சங்கர் தலைமையில், இணை கமிஷனர் அன்பு மேற்பார்வையில், 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
தீவிர சோதனை:
ஜனாதிபதி, சென்னையில் செல்லும் வழித்தடங்கள், பலத்த சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. மூன்று நாட்களாக, வெடிகுண்டு செயல் இழப்பு நிபுணர்களும், அதிநவீன கருவிகளுடன் சோதனை நடத்தி உள்ளனர். உளவு போலீசாரும் உஷார் படுத்தப்பட்டு உள்ளனர்.
English Summary:
Chennai, Tambaram Air Force to participate in the ceremony, President Pranab Mukherjee today (March 2) is Madras. In turn, 1,000 police and security personnel were on duty.