புதுடில்லி: தற்போது புழக்கத்திலுள்ள புதிய 2,000 ரூபாய் நோட்டுகளை அச்சிடும் பணி, கடந்த ஆண்டு, ஆகஸ்ட் மாதம் துவங்கப்பட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ரூபாய் நோட்டு வாபஸ்:
மத்திய அரசு கடந்த ஆண்டு நவ.,8ம் தேதி ரூ. 500 மற்றும் ரூ. 1,000 நோட்டுகளை வாபஸ் பெற்றது. இதனையடுத்து புதிய 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகள் தற்போது புழக்கத்துக்கு வந்தன. இந்நிலையில் ம.பி., மாநிலத்தை சேர்ந்த சந்திரசேகர் கவுட் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், ரூ. 2,000 நோட்டுகளை அச்சிடும் பணி எப்போது தொடங்கியது? என கேள்வி எழுப்பினார்.
துவக்கம்:
இதற்கு ரூபாய் நோட்டுகளை அச்சிடும் ரிசர்வ் வங்கியின் துணை நிறுவனம் பதில் அளித்துள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 2,000 ரூபாய் நோட்டுகளை அச்சிடும் பணி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22ம் தேதியும்(22-08-2016). புதிய 500 ரூபாய் நோட்டுகளை அச்சிடும் பணி கடந்த ஆண்டு, நவம்பர் மாதம் 23ம் தேதியும்(23-11-2016) துவங்கப்பட்டது.
நிறுத்தம்:
மேலும், பழைய 500 ரூபாய் நோட்டுகளை அச்சிடுவது கடந்த ஆண்டு, அக்டோபர் மாதம் 27ம் தேதியுடனும்(27-10-2016), பழைய 1,000 ரூபாய் நோட்டுகளை அச்சிடுவது, ஜூலை 28ம் தேதியுடனும்(28-07-2016) நிறுத்தப்பட்டது. இவ்வாறு அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.