சென்னை : திமுக செயல் தலைவர் ஸ்டாலினும், அவரது கட்சி நிர்வாகிகளும் தங்களின் சொத்து விபரத்தை வெளியிட தயாரா என தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பி உள்ளார்.
நாங்களும் குட்டிக்கரணம் போடுவோம் :
தமிழகத்தில் பா.ஜ.,வை வளர்க்க முடியாததால் திமுக மீது பா.ஜ., குற்றம்சாட்டுகிறது. குட்டிக்கரணம் போட்டாலும் தமிழகத்தில் பா.ஜ.,வால் வளர முடியாது. அது மேல்தட்டு மக்களின் கட்சி என ஸ்டாலின் கூறி இருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள தமிழிசை, எத்தனை குட்டிக்கரணம் போட்டு அவர்கள் திமுக.,வை வளர்த்தார்கள் என அனைவருக்கும் தெரியும். அதை விட நன்றாக குட்டிக்கரணம் போட்டு எங்களாலும் பா.ஜ.,வை வளர்க்க முடியும். திராவிட கட்சியினரை தேசிய சிந்தனையுடன் மத்திய அமைச்சர்களாக்கியது பா.ஜ., என்பதை மறந்து விடக் கூடாது.
சொத்து கணக்கை வெளியிட தயாரா? :
நாங்கள் அடித்தட்டு மக்களுக்காகவும், அவர்களது பிரச்சினைகளுக்காகவும் பாடுபட்டு கொண்டிருக்கிறோம். எங்கள் நிர்வாகிகள் சொத்து கணக்கை காட்ட தயாராக இருக்கிறோம். மு.க.ஸ்டாலினும், அவரது கட்சி நிர்வாகிகளும் சொத்துக்கணக்கை வெளியிட தயாரா? அப்போது தெரியும். எந்த கட்சி அடித்தட்டு கட்சி? எந்த கட்சி மேல் தட்டு கட்சி என்பது. இவ்வாறு தமிழிசை தெரிவித்தார்.
English summary:
Chennai: DMK leader Stalin active, ready to his party officials to disclose their assets to the State BJP President Tamilisai Soundarajan questioned.