சென்னை: ஆர்.கே.நகர் தொகுதியில் லெட்டர் பேடு இயக்கமாக இருந்தாலும் கூட்டிகிட்டு வாங்க. அவங்களை எனக்கு ஆதரவு கொடுப்பது போல, அறிக்கை மட்டும் விடச் சொல்லுங்க. அவங்களுக்கு தேவையானதை கொடுத்துடலாம் என்று, கட்சியின் முக்கியத் தலைவர்களுக்கு அசைன்மெண்ட் கொடுத்துள்ளார் அ.தி.மு.க.,வின் நியமன துனைப் பொதுச் செயலர் தினகரன்.
முளைக்கும் சங்கங்கள்:
இதையடுத்து, ஆர்.கே.நகர் தொகுதியில் இருக்கும் லெட்டர் பேடு சங்க நிர்வாகிகளைத் தேடி, கட்சியின் முக்கியத் தலைவர்கள் அலைந்து கொண்டிருக்கின்றனராம். பத்து ஓட்டு இருந்தால் கூட போதும். லெட்டர் பேடு சங்கமாக இருந்தாலும் பரவாயில்லை. தினகரனை ஆர்.கே.நகர் தொகுதியில் ஆதரிக்கிறோம் என்று மட்டும் அறிக்கை வெளியிட வேண்டும் என்று, சொல்லி, சங்கங்களை வளைத்துக் கொண்டிருக்கின்றனர்.
அ.தி.மு.க., மூத்த தலைவர்களின் இந்த தேடுதல் வேட்டையை அறிந்து, ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள சிலர், சமூக அமைப்புகள் பெயரில், திடீர் லெட்டர் பேடு அச்சடிக்கத் துவங்கி உள்ளனர். அவர்களெல்லாம் விரைவில் தினகரனை சந்தித்து, ஆதரவளிக்கக்கூடுமாம். இப்படி நூற்றுக்கணக்கான சங்கங்களும், பொது நல அமைப்புகளும் தனக்கு ஆதரவளிப்பது போல, செய்திகள் வர வர, அது தொகுதிக்குள் தன்னுடைய இமேஜை உயர்த்தும் என்றும், எதிர்ப்பாக இருப்போரின் மன நிலையை மாற்றும் என்றும் தினகரன் கணக்குப் போட்டே, இப்படி செய்கிறார் என்பது மக்களுக்கு மட்டும் தெரியாமலா இருக்கும்? இந்த தேர்தல் நேரத்து ஸ்டண்டெல்லாம் எடுபடப் போவதில்லை என, தி.மு.க., தரப்பில் கூறுகின்றனர்.