சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிட 127 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவை தொடர்ந்து ஆர். கே நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக கடந்த 16ம் தேதி துவங்கிய வேட்புமனு தாக்கல் இன்று(மார்ச்23) பிற்பகல் 3 மணியுடன் நிறைவு பெற்றது. தேர்தலில் போட்டியிட 127 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
தேர்தல் நடத்தும் அலுவலர் :
தி.மு.க.,வின் மருதகணேஷ், ஓ.பி.எஸ்., அணி சார்பில் மதுசூதனன், சசி அணியின் தினகரன், பா.ஜ.,வின் கங்கை அமரன், தே.மு.தி.க., வேட்பாளர் மதிவாணன், மார்க்சிஸ்ட் கட்சியின் ஆர். லோகநாதன், ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய வேட்பாளர்கள். வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் பிரவீண் நாயர் மனுக்களை பெற்று கொண்டார். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை(மார்ச் 24)ம் தேதி நடைபெறும். தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் ஏப்ரல் 17 ம் தேதி எண்ணப்படும்.