அமேதி: காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுலின் அமேதி தொகுதியில் உள்ள ஒரு கிராம மக்கள், சாலை சரி செய்யப்படாததை கண்டித்து தேர்தலை புறக்கணித்தனர்.
வெறிச்சோடி...:
உ.பி.,யில் உள்ள அமேதி தொகுதி எம்.பி.,யாக காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் உள்ளார். இந்த தொகுதியில் பார்சவூலி கிராமம் உள்ளது. இங்கு 339 ஆண்கள், 310 பெண்கள் என மொத்தம் 649 ஓட்டுக்கள் உள்ளன. இந்த கிராம மக்கள், நேற்று(பிப்., 27) நடந்த தேர்தலை புறக்கணித்தனர். ஒருவர் கூட தங்களது ஓட்டை பதிவு செய்யவில்லை. இதனால் காலை முதல் மாலை வரை ஓட்டுச்சாவடி வெறிச்சோடி காணப்பட்டது. தங்கள் கிராமத்திலிருந்து, அமேதி - துர்காப்பூர் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் சாலை சரி செய்து தரப்படாததை கண்டித்து ஓட்டுப்போடவில்லை என கிராம மக்கள் தெரிவித்தனர்.
கோபம்:
ரயில்வே ஊழியர் ஒருவர் கூறுகையில், சஞ்சய் எம்.பி.,யாக இருந்த போது அமைக்கப்பட்ட சாலை தற்போது சேதமடைந்துள்ளது. இதனை சரி செய்ய யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.மற்றொரு முதியவர் கூறுகையில், இதனை நாங்கள் சாதாரணமாக எடுத்து கொள்ள முடியாது. எம்.பி.,க்கள் எம்.எல்.ஏ.,க்கள் வருகிறார்கள் செல்கிறார்கள் ஒன்றும் செய்யவில்லை. மக்களை பார்வையற்றவர்கள் என அவர்கள் நினைக்கின்றனரா என கோபமாககேட்டார். இந்த தொகுதியில் சரியாக பாசன வசதி இல்லை. நல்ல பள்ளி, கல்லூரிகள் இங்கு இல்லை. இங்கு கர்ப்பிணி பெண்கள், பிரசவத்தின் போது மரணமடைவதும் தொடர்கிறது. என, மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சமாளிப்பு:
இது தொடர்பாக காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் கூறுகையில், அமேதி தொகுதி வளர்ச்சியடையவில்லை எனக்கூற முடியாது. எந்த தொகுதியும் 100 சதவீத வளர்ச்சி பெற்றுள்ளது என யாரும் கூற முடியாது. ஆனால், இதனை செய்ய நாங்கள் முயற்சி செய்து வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.
English summary:
Amethi: Congress Vice President Rahul's Amethi constituency on a rural road, which was not exactly boycotted the elections in protest.