
நீண்ட தாமதத்துக்கு பின், இதை அமலாக்கும் பணிகளை, தமிழக அரசு துவக்கியது. இதற்கான வரைவு விதிகளை, ஜன., 28ல் வெளியிட்ட அரசு, பொதுமக்கள் கருத்து தெரிவிக்க, 21 நாட்கள் அவகாசம் வழங்கியது.
இது குறித்து, நகரமைப்புத் துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:வரைவு சட்ட விதிகள் குறித்து, ரியல் எஸ்டேட் அமைப்புகள், கட்டுமான நிறுவனங்கள், தொழில்முறை வல்லுனர்கள் உட்பட, 42 பேர் இ - மெயில் வாயிலாக கருத்துகளை தெரிவித்து இருந்தனர்.
இதன் மீது, நகரமைப்புத் துறை, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ., அதிகாரிகளின் கருத்துரைகள் பெறப்பட்டன. இவை அனைத்தும் பட்டியலாக தொகுக்கப்பட்டு, அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளன. இவ்வாறு உயர் அதிகாரிகள் கூறினர்.