சென்னை: ‛தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற பிரதமரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது' என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
கோரிக்கை:
டில்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்த பழனிசாமி, சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது: தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற பிரதமரிடம் கோரிக்கை விடுத்தேன். இலங்கை சிறையிலுள்ள மீனவர்கள், படகுகளை விடுவிக்க வலியுறுத்தினேன். இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க வலியுறுத்தினேன். வறட்சி நிவாரணம், வர்தா புயல் நிவாரண நிதி வழங்குமாறு கோரியுள்ளேன்.
நெடுவாசல்..
ஜல்லிக்கட்டுக்கு விலக்கு அளித்த பிரதமருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. நீட் தேர்விலிருந்து விலக்களிக்க கோரிக்கை விடப்பட்டது. நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட மத்திய அரசிடம் கோரிக்கை விடப்பட்டது. காவிரி மேலாண்மை வாரியத்தை விரைவில் அமைக்க வலியுறுத்தினேன். தஞ்சையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க பிரதமரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தாம்பரம்-செங்கல்பட்டு சாலையை விரிவாக்க கோரிக்கை வைக்கப்பட்டது.
தமிழகத்திற்கு கூடங்குளம் மின்சாரம்:
கூடங்குளத்தில் 3வது அணு உலையில் உற்பத்தியாகும் மின்சாரத்தை தமிழகத்திற்கு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் நெடுவாசலில் போராட்ட குழுவினர் இன்று (மார்ச் 1) என்னை சந்திக்கவுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்