திருப்பதி: திருப்பதி உண்டியலில் காணிக்கையாக வந்த ரூ. 4 கோடி செல்லாத ரூபாய் நோட்டுகளை புதிய நோட்டுகளாக மாற்ற முடியாமல் திருப்பதி தேவஸ்தானம் திணறிவருகிறது.
கடந்த ஆண்டு நவம்பரில் ரூ. 1000 ,ரூ.500 நோட்டுகள் செல்லாது எனவும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் வங்களில் பழைய நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என பிரதமர் மோடி அறிவித்தார். தற்போது புதிய ரூ. 2000 மற்றும் ரூ. 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன. இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களில் திருப்பதி உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய ரூ. 1000 , ரூ. 500 செல்லாத நோட்டுகள் ரூ. 4 கோடி வரை வசூலாகியுள்ளது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக கோவில் நிர்வாகி ஒருவர் கூறுகையில், செல்லாத நோட்டுகளை புதிய நோட்டுகளாக தருமாறு மத்திய நிதி அமைச்சகம், ரிசர்வ் வங்கிக்கு கடிதம் எழுதியுள்ளோம். உரிய பதில் வரும் என நம்புகிறோம் என்றார்.
English summary:
Tirupati: Tirupati on piggy who donated Rs. 4 million invalid banknotes New banknotes Tirupati Devasthanam unable to convert.