சென்னை: பிளஸ் 2 தேர்வில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தேர்வுத்துறை இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாதுகாப்பு:
பிளஸ் 2 தேர்வு நாளை (மார்ச்2) துவங்குகிறது. தமிழகம் மற்றும் புதுவையில் 9 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள்தேர்வு எழுத உள்ளனர். 5.69 லட்சம் மாணவர்கள் தமிழ் வழியில் தேர்வு எழுத உள்ளனர். 98 கைதிகள் பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர். பிளஸ் 2 வினாத்தாள் வைக்கப்பட்டுள்ள 301 மையங்களுக்கு ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பறக்கும் படை:
இந்நிலையில், அரசு தேர்வுத்துறை இயக்குநர் வெளியிட்ட அறிவிப்பு:
*ஒழுங்கீன செயலுக்கு உடந்தையாக இருந்தால், தேர்வு மையம், பள்ளி அங்கீகாரம் ரத்து செய்யப்படும்.
*தேர்வு மைய வளாகத்திற்குள் மாணவர்கள், ஆசிரியர்கள் செல்போன் வைத்திருக்கக்கூடாது
*தேர்வின்போது, ஒழுங்கீனமாக செயல்படும் மாணவர்களுக்கு உரிய தண்டனை தரப்படும்
*தேர்வு மையங்களை பார்வையிட 4 ஆயிரம் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.