பெங்களூரு:தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை, திட்டமிட்டு கொலை செய்து விட்டதாக, சிறையில் உள்ள சசிகலாவுக்கு பலரும் கடிதங்கள் எழுதியுள்ளதாக, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சொத்து குவிப்பு வழக்கில், நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ள சசிகலா, அவரது அண்ணி இளவரசி, அக்காள் மகன் சுதாகரன் ஆகியோர், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சசிகலாவுக்கு, தினமும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என பலரிடம் இருந்தும் ஏராளமான கடிதங்கள் வருகின்றன. சிறை விதிகளின் படி, கைதிகளுக்கு வரும் எந்த கடிதங்களும் பிரித்து படிக்கப்பட்ட பிறகே, வழங்கப்படும். அதுபோல, குடும்பத்தினர், நண்பர்களுக்கு கைதிகள் கடிதம் எழுதினாலும், அதை அதிகாரிகள் படித்த பின்பே, அனுப்புவர்.
'சசிகலா, மத்திய சிறை, பரப்பன அக்ரஹாரா, பெங்களூரு - 560100' என்ற முகவரியிட்டு ஏராளமான கடிதங்கள் வருகின்றன. சசிகலாவுக்கு வரும் கடிதங்களை, தமிழ் தெரிந்த சிறை அதிகாரிகள் அல்லது ஊழியர்கள் படித்த பின்பே, சசிகலாவிடம் தருகின்றனர்.
இது குறித்து, சிறை துறை வட்டாரங்கள் கூறியதாவது:
சசிகலாவுக்கு வரும் பெரும்பாலான கடிதங்கள், தமிழக முதல்வராக இருந்த, ஜெயலலிதாவை, சசிகலா திட்டமிட்டு கொலை செய்து விட்டதாகவே குற்றம் சாட்டுகின்றன. அதே நேரத்தில், சசிகலாவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில், எந்த கடிதங்களும் வருவதில்லை.
சசிக்கு வரும் கடிதத்தை, முதலில் இளவரசி வாசித்து பார்க்கிறார். பின், அது சசியிடம் செல்கிறது. ஆரம்பத்தில், இந்த கடிதங்களை ஆர்வமுடன் வாசித்த சசிகலா, கடுமையாக திட்டப்படுவதை தொடர்ந்து, கடிதங்கள் வாசிப்பதையே நிறுத்தி விட்டார்.
கடிதங்கள், சென்னை, திருச்சி, தர்மபுரி, மதுரை, சேலம், திண்டுக்கல், கரூர், விழுப்புரத்தில் இருந்தே அதிக அளவில் வருகின்றன.
கடிதத்தில், 'நாங்கள் பெரிதும் நேசித்த எங்கள் தலைவியை நீங்கள் கொன்று விட்டீர்கள். நீங்கள் நம்பிக்கையில்லாத நபர், நன்றியில்லாதவர், முதுகில் குத்தி விட்டீர்கள். உங்களுக்கு வாழ்க்கை அளித்தவரை ஏமாற்றி விட்டீர்கள்.
'நீங்கள் செய்த கெட்ட காரியத்திற்கான பலனை, அனுபவித்தே ஆக வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் செய்த ஒவ்வொரு செயலுக்கான விளைவை சந்தித்தே ஆக வேண்டும்' என்பது போன்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.இவ்வாறு சிறை வட்டாரங்கள் தெரிவித்தன.