'ஜெயலலிதாவை விமர்சிப்பதை தவிர்த்து, சசிகலாவை கடுமையாக விமர்சியுங்கள்' என, தி.மு.க., பேச்சாளர்களுக்கு, அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் ஆலோசனை கூறியுள்ளார்.
இதுகுறித்து, தி.மு.க., வட்டாரம் கூறியதாவது:உச்ச நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட, ஜெயலலிதாவின் படத்தை, தலைமைச் செயலகத்திலிருந்து அகற்ற வேண்டும் என, ஸ்டாலின் வலியுறுத்தினார். இது, பொது மக்களிடத்தில் அதிருப்தியை ஏற்படுத்துவதாக, மாவட்ட செயலர்கள், ஸ்டாலினிடம் தெரிவித்தனர். அதையடுத்து, தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்ட ஸ்டாலின், நேற்று முன்தினம் நடந்த பேச்சாளர்கள் கூட்டத்தில், சசிகலாவை கடுமையாக விமர்சிக்கும்படி கூறினார்.
'ஜெயலலிதாவை விமர்சிப்பதை தவிர்த்து, குற்றவாளி சசிகலாவையும், அவரது குடும்பத்தினரையும் பற்றி, காட்டமாக விமர்சனம் செய்யுங்கள். தி.மு.க., மேடைகளில், சசிகலா எதிர்ப்பு குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும்' என, பேச்சாளர்களிடம் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இவ்வாறு கட்சி வட்டாரம் கூறியது.