புதுடில்லி:ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்தை ஜனாதிபதி ஆக்கவேண்டும் என்பதை கருத்தில் எடுத்துக் கொள்ளவேண்டும் என சிவசேனா கூறிஉள்ளது.
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் 2017- ஜூலை இறுதியில் நிறைவடைகிறது. அதற்கு முன்பாக அந்த பதவிக்கு தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த நிலையில், பா.ஜ., சார்பில் ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளரை தேர்வு செய்யவும், தேர்தல் குறித்து வியூகம் வகுப்பதில் பா.ஜ., மும்மரமாக உள்ளது. இதற்கான நடவடிக்கையில் பிரதமர் மோடி இறங்கி உள்ளார். இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சி தலைவர்களுக்கும் மோடி அடுத்த வாரம் டில்லியில் இரவு விருந்து அளிக்கிறார்.
உத்தவ் தாக்கரேவுக்கு அழைப்பு:
இவ்விருந்தில், கலந்து கொள்ளுமாறு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. இதனை ஏற்று உத்தவ் தாக்கரே, இந்த விருந்தில் பங்கேற்பார் என்று சிவசேனா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஜனாதிபதி பதவிக்கு பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன் மற்றும் மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோரது பெயர்கள் அடிபடுகின்றன. இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்தை ஜனாதிபதி ஆக்கவேண்டும் என்பதை கருத்தில் எடுத்துக் கொள்ளவேண்டும் என சிவசேனா தெரிவித்துள்ளது.