ஜாகர்தா - இந்தியாவுக்கு விரைவில் செல்வேன் என்று வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஷேக் ஹசினா வரவிருந்தார். ஆனால் இந்தியாவில் உயர்மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது உள்பட பல்வேறு காரணங்களால் ஹசினா தனது பயணத்தை ஒத்திவைத்தார். இந்தநிலையில் இந்துமகா சமுத்திரப்பகுதி நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஹசினா இந்தோனேசியா தலைநகர் ஜாகர்தாவுக்கு வந்துள்ளார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது இந்திய பயணம் குறித்த கேட்ட கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில்இந்தியாவுக்கு விரைவில் பயணம் செய்வேன் என்றார்.
கடந்த பிப்ரவரி மாதம் இந்திய வெளியுறவுச் செயலாளர் ஜெய்சங்கர் டாக்காவுக்கு சென்றிருந்தார். அப்போது வங்கதேச வெளியுறவு செயலாளர் பிரதமர் ஹசினாவின் பத்திரிகை உதவி தொடர்பாளர் நஸ்ரூல் இஸ்லாம் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் வரும் ஏப்ரல் மாதம் இந்தியாவுக்கு பிரதமர் ஹசினா செல்வார் என்றார். கடந்த 2015-ம் ஆண்டு இந்தியாவுக்கு வருமாறு வங்கதேச பிரதமர் ஹசினாவுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். அதனை ஏற்று கடந்த டிசம்பர் மாதம் இந்தியாவுக்கு ஹசினா வரவிருந்தார். ஆனால் இந்தியாவில் உயர்மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால் பிரதமர் மோடி மற்றும் முக்கிய மத்திய அமைச்சர்களுக்கு பணி அதிகமாக இருந்ததால் ஹசினா தனது இந்திய பயணத்தை ஒத்திவைத்தார்.