புதுடில்லி: ‛‛ மருத்துவ படிப்புக்கான, ‛நீட்' தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் விஷயத்தில் மத்திய அரசு நல்ல முடிவு எடுக்கும் என நம்புகிறோம்,'' என, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கூறியுள்ளனர்.
'நீட்' தேர்வு கட்டாயம்:
மருத்துவ படிப்பான எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில் சேர, ‛நீட்' எனப்படும் தேசிய நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. கடந்த ஆண்டு இந்த தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. இந்த ஆண்டு மே மாதம், 8 ம் தேதி நடக்க உள்ளது. இந்த தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு நிரந்தரமாக விலக்கு அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் ஆகியோர் டில்லி சென்று மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ஜவடேகர், மத்திய சுகாதார துறை அமைச்சர் நட்டா ஆகியோரை சந்தித்து பேசினர். பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:
இந்த தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க கோரி தமிழக சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த ஒப்புதலை பெற்றுத்தரும்படி மத்திய அரசை கேட்டு வருகிறோம். தமிழகத்தில், மூன்று லட்சம் மாணவர்கள் உயிரியல் படித்து வருகின்றனர். ஆனால், சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தின் கீழ், 3,000 மாணவர்கள் தான் படிக்கின்றனர். இரண்டு பாட திட்டங்களுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை கருத்தில் கொண்டு தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும்படி கேட்டுள்ளோம். நல்ல முடிவு எடுக்கப்படும் என்ற நம்பிக்கையில் உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
English summary:
NEW DELHI: '' clinical study, 'Speed' option to exempt the state from the federal government in this regard and we hope to make a good decision, '' as minister of health vijayabaskar State, the Secretary of the Department, said Radhakrishnan.