சென்னை: தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கு தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை மத்திய அரசு இனிமேலும் வேடிக்கை பார்க்கக்கூடாது. இலங்கை அரசை தொடர்பு கொண்டோ அல்லது தூதரை வரவழைத்தோ கண்டனம் தெரிவிக்க வேண்டும். இலங்கை துப்பாக்கிச்சூட்டில் மீனவர் ஒருவர் பலியாகியுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. சாரோன் என்ற மீனவர் காயமடைந்தது வேதனை அளிக்கிறது. காயமடைந்த மீனவருக்கு உயர்தர சிகிச்சை அளிக்க வேண்டும். உயிரிழந்த மீனவர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
English summary:
Chennai: Sri Lankan Navy had carried out the shooting DMK leader Stalin condemned the act.