புதுடில்லி: ஹார்மோன் மாற்றம் பற்றிய மத்திய அமைச்சர் மேனாகாவின் கருத்துக்கு சமூக வலைதளத்தில் பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பேட்டி:
மத்திய அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான மேனகா 'டிவி' சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: 'ஒரு மகனை அல்லது மகளை பள்ளிக்கு அனுப்பும் ஒரு பெற்றோராக, அவர்களுக்கு பாதுகாப்பு கிடைக்க வேண்டும் என, எதிர்பார்க்கிறேன். 16 - 17 வயது ஆகும் போது, ஹார்மோன்கள் செயல்பாட்டால், இனக்கிளர்ச்சி ஏற்பட்டு, மாணவர்கள், பல்வேறு பிரச்னைகளுக்கு ஆளாகின்றனர். அதில் இருந்து பாதுகாக்க, ஹாஸ்டலில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
கடும் எதிர்ப்பு:
மேனகாவின் கருத்துக்கு, 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில் பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பிரபல எழுத்தாளர் ஷோபா டே, சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், 'மேனகாவுக்கு, ஹார்மோன் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தோன்றுகிறது. பெண்கள் மீது கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்று தானே அவர் சொன்னார். இனிய சர்வதேச பெண்கள் தின வாழ்த்துகள்' என, விமர்சனம் செய்துள்ளார்.
அபூர்வா விஸ்வநாத் என்பவர், டுவிட்டரில், 'எனக்கு கூட, இன்று ஹார்மோன் பாதிப்புஏற்பட்டது; என்ன செய்வது என, தெரியவில்லை. இதற்கு, மேனகா, தக்க கட்டுப்பாட்டு விதியை சொல்ல வேண்டும்' என, கிண்டலடித்து உள்ளார்.
மற்றொரு, 'டுவிட்டர்' பயனாளர், 'ஹார்மோன் பாதிப்பு ஏற்பட்ட ஆண்களை, பூட்டி வையுங்கள். பெண்கள், அவர்களின் வாழ்க்கையை முழுமையாக வாழட்டும்' என, கூறியுள்ளார்.
விளக்கம்:
இது தொடர்பாக, பின், விளக்கம் அளித்திருந்த மேனகா, ''ஹார்மோன் மாற்றம் என, சொன்ன போது, பாலியல் ரீதியில் நான் பொருள் கூறவில்லை; ஹாஸ்டலில் கட்டுப்பாடு விதிக்கப்பட வேண்டும் எனக் கூறியது, ஒழுக்கம் ஏற்பட வேண்டும் என்ற எண்ணத்தினால் மட்டுமே,'' என்றார்.

English Summary:
NEW DELHI : Union Minister of hormonal change menaka expressed strong objection to the view of many of the social Web.