சென்னை: நீட் தேர்வு குறித்து மாணவர்களை பற்றி தமிழக அரசு கவலைப்படவில்லை என தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: நீட் தேர்வு குறித்து சி.பி.எஸ்.இ. அடுக்கடுக்கான நிபந்தனைகளால் கிராமப்புற மாணவர்களுக்கும், நகர்புறத்தில் உள்ள ஏழை, எளிய மாணவர்களுக்கும் மருத்துவப் படிப்பில் சேரும் வாய்ப்பே இனி கிடைக்காதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களித்து தமிழக சட்டசபையில் அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதலில் பெறுவதில் அதிமுக அரசு எவ்வித அவசரமோ, அக்கறையோ காட்டவில்லை.
மன அழுத்தம்:
அவர்களுக்கு, “கூவத்தூரில்” கொண்டாட்டம் நடத்த நேரமிருந்ததே தவிர, மார்ச் 1 ஆம் தேதி “நீட் தேர்வுக்கு” விண்ணப்பிக்க இறுதி நாள் என்ற நிலையிலும் கூட போர்க்கால நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடவில்லை. சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட “நீட்” மசோதாவிற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற முன்கூட்டியே தேவையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. “நீட்” தேர்வு பற்றிய நிலை என்ன என்பது தெரியாமல் தேர்வு நடைபெறும் மே 7 ஆம் தேதியை எதிர்நோக்கி ஒருவிதமான மன அழுத்தத்துடனும், குழப்பத்துடனும் லட்சக்கணக்கான மாணவர்கள் காத்திருக்கிறார்கள். அதைவிட அதிகமான மன அழுத்தத்தில் மாணவர்களின் பெற்றோர்கள் இருக்கிறார்கள்.
பேராபத்து:
பெங்களூரு சிறையில் உள்ள குற்றவாளி சசிகலாவைப் பார்க்க அமைச்சர்கள் படையெடுக்கிறார்களே தவிர, நீட் தேர்வு பற்றி கவலைப்படவில்லை. அதிலும் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் “நீட்” தேர்வு குறித்த கேள்விக்கு “மாணவர்கள் எதற்கும் தயாராக இருக்கிறார்கள்” என்று தெரிவித்திருப்பது “பெங்களூருக்கு ஓடோடிச் சென்று குற்றவாளி சசிகலாவை பார்ப்பதற்கு மட்டுமே அவருக்கு நேரம் இருக்கிறது” என்பதை தெளிவுபடுத்தியுள்ளது. மாணவர்களின் எதிர்காலத்துடன் குற்றவாளியின் “பினாமி ஆட்சி” நடத்தும் இந்த விளையாட்டு பேராபத்து என்பதை அதிமுக அரசும், கல்வி அமைச்சராக இருக்கும் செங்கோட்டையன் போன்றவர்களும் உணர மறுப்பது வேதனையாக இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
English summary:
Chennai: The Tamil Nadu government does not care about the students about the need to select the DMK leader MK Stalin said act.