வாஷிங்டன்: அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் இந்தியருக்கு உதவிய அமெரிக்க நாட்டு இளைஞருக்கு தனது பாராட்டை மத்திய அமைச்சர் சுஷ்மா தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தில் கடந்த பிப். மாதம் நடந்த துப்பாக்கிச்சூட்டில் இந்திய என்ஜினீயர் சீனிவாஸ் குச்சிபோட்லா (வயது 32), மதுபான விடுதி ஒன்றில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார். இனவெறி காரணமாக இந்த சம்பவம் நடந்தது. துப்பாக்கிச்சூடு நடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
இந்தியா தலை வணங்குகிறது:
சம்பவத்தின் போது இந்தியருடன் இருந்த இயன் கிரில்லாட் என்ற அமெரிக்கர் காயமடைந்தார். அவர் தான் இந்தியரை காப்பாற்ற முயன்று காயமடைந்தார். இதையறிந்த மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியது, இந்தியரை காப்பாற்ற முயற்சித்த அமெரிக்கர் இயன் கிரில்லாட்டை பாராட்டுகிறேன். கிரில்லாட்டின் வீரச்செயலுக்கு இந்தியா தலை வணங்குகிறது. அவரின் குடும்பத்தினர் இந்தியாவுக்கு வரவேண்டும் என்று அழைப்பு விடுகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
English summary:
Washington: The United States in the state of Kansas, who helped the Indians in the crossfire, the Minister Sushma said her appreciation for American youth.
.