திருநெல்வேலி:நெல்லையில் 11 மாத பெண் குழந்தை பன்றிக்காய்ச்சல் தாக்கி பலியாகியுள்ளது.மேலும் ஒரு பெண் சிகிச்சையில் உள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை காலமாக நவம்பர், டிசம்பரில்மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள கடையநல்லூர், தென்காசி பகுதிகளில் சிக்குன்குனியா, டெங்குஉள்ளிட்ட திடீர் காய்ச்சலால் உயிரிழப்புகள் ஏற்பட்டுவருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் இந்த பாதிப்பின் அளவுஅதிகரித்து வருகிறது.
பன்றிக்காய்ச்சல் பரவியது:
ஸ்வைன் ஃப்ளு எனப்படும் பன்றிக் காய்ச்சல், பன்றிகள் மற்றும் கோழிகளுக்கு வரும் ஒரு வித சுவாச நோய் ஆகும். இது டைப்-அ இன்புளுயன்சா என்ற வைரஸ் கிருமிகளால் ஏற்படுகிறது.
பன்றியின் சுவாச பையில் இருக்கும் எச்1என்1 என்ற வைரஸ் கிருமிகள் ஆர்.என்.ஏ. மூலக் கூற்றை அடிப்படையாக கொண்டு உருமாறி மனிதர்களை தொற்ற கூடியவை. கடையநல்லூரில் கடந்த இரண்டு மாதங்களில் 3 பேர் அடுத்தடுத்து மர்மக்காய்ச்சலுக்கு பலியாகியுள்ளனர்.
கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் 7ம் தெருவை சேர்ந்தவர் மோதிபாபா. கூலித்தொழிலாளி., இவரது 11மாத பெண் குழந்தை ஆயிஷா நசீரா, கடந்த சில தினங்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தது.செங்கோட்டை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு பிறகு நேற்று நெல்லை மருத்துவக்கல்லூரிமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. அங்கு பன்றிக்காய்ச்சலுக்கு என ஏற்படுத்தப்பட்டள்ளதனி வார்டில் அனுமதித்து சிகிச்சையளித்தனர். இருப்பினும் குழந்தை பலியானாள்.
இதே வார்டில் நெல்லை தச்சநல்லூரை சேர்ந்த வனிதா 40 என்பவரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.இதனிடையே ஸ்வைன் ஃப்ளு எனப்படும் பன்றிக் காய்ச்சல் பரவியது குறித்து நெல்லைமருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதல்வர் சித்தி அத்திய முனவரா,
மருத்துவத்துறை துணை இயக்குநர் ராம்கணேஷ், தொற்றுநோய் பிரிவு மருத்துவர்கள், இந்தியன் மெடிக்கல்அசோசியேசன் நிர்வாகிகள் பங்கேற்றனர். பன்றிக்காய்ச்சல் இறப்பு குறித்து வழக்கம்போலதுணைஇயக்குநரோ, டீனோ தகவல்தராமல் ஆலோசனைகளில் மட்டுமே ஈடுபட்டுவந்தனர்.
English summary:
Tirunelveli, Tirunelveli, a woman in the 11-month-old baby girl in the treatment of swine flu has struck death