ஐதராபாத்: தெலுங்கானாவில் உள்ள ரெசிடன்சியல் பெண்கள் கல்லூரியில் திருமணமாகாத பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்ற மாநில அரசின் உத்தரவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா அரசு சார்பில் பெண்களுக்கான ரெசிடன்சியல் கல்லூரிகள் மொத்தம் 23 செயல்படுகின்றன. ஒவ்வொரு கல்லூரியிலும் தலா 280 மாணவிகள் படிக்கும் அளவுக்கு வசதி உள்ளது. தற்போது இங்கு 4000 மாணவிகள் படித்து வருகின்றனர்.
சர்ச்சை:
இந்நிலையில், கல்லூரிகள் கூட்டமைப்பு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை: கல்லூரிகளில் சேர திருமணமாகாத பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும். ஆங்கில வழியில் நடத்தப்படும் பி.ஏ., பி.காம், பிஎஸ்சி., படிப்புகளுக்கு 16.04.17 ல் நுழைவுத்தேர்வு நடத்தப்படும் எனக்கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கவனம் சிதறும்!:
இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், ஆண்கள் கல்லூரிக்கு வரும்போது, பெண்களின் கவனம் சிதறக்கூடாது என்பதற்காக இந்த விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது. திருமணமான பெண்கள் கல்லூரியில் சேர்வதை ஊக்கப்படுத்த மாட்டோம். அதேநேரத்தில் அவர்கள் கல்லூரி நிர்வாகிகளை அணுகினால், தடுக்கவும் மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.
English summary:
Hyderabad: The Telangana residency women's college in the state government's order would apply only to unmarried women has caused controversy.
A total of 23 colleges for women are acting on behalf of the Government of Telangana residency . Each college has 280 students studying at each facility. Currently, 4,000 students are studying.