வாரணாசி: நாட்டை கொள்ளையடித்தவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும் என உ.பி., மாநிலம் வாரணாசியில் நடந்த கடைசி கட்ட தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி பேசினார்.
உ.பி., மாநில சட்டசபை தேர்தலில் கடைசி கட்ட பிரச்சாரம் நடந்து வருகிறது. இதையடுத்து பிரதமர் மோடி வாரணாசியில் இன்று(05-03-17) 2வது நாளாக பிரச்சாரம் மேற்கொண்டார். திறந்த வெளி வாகனத்தில் நின்று பிரச்சாரம் செய்த மோடிக்கு வழிநெடுகிலும் அமோக வரவேற்ப்பு அளிக்கப்பட்டது.
உங்களுடைய ஆசியே எனது பலம்:
பிரச்சாரத்தின் கடைசி கட்டமாக பொதுமக்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசுகையில் :‛‛ உங்களுடைய ஆசியே எனது பலம். உ.பி.,க்கு ஊழலற்ற அரசு தான் தேவை. நாடு முழுவதுமான வளர்ச்சியே எனது குறிக்கோள். 70 ஆண்டுகளாக நாட்டை கொள்ளை அடித்தவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும். பண மதிப்பிழப்பு குறித்து நான் அறிவித்த அறிவிப்பால் ஊழல்வாதிகள் ஒன்றிணைந்து தவறான தகவல்களை பரபரப்பு வருகின்றனர்.
வாரணாசிக்கு மிகப்பெரிய கனவு:
வாரணாசிக்கான மிகப்பெரிய கனவுகளை வைத்துள்ளேன், முந்திய அரசு வாரணாசியை புறக்கணித்தது. கிழக்கிந்திய நாடுகளின் வளர்ச்சி மிக முக்கியத்துவமானது. காங்., ஆட்சியில் காமென்வெல்த் ஊழல், 2ஜி ஊழல், ஹெலிகாப்டர் ஊழல் இப்படியான ஊழல்கள் தான் இருந்தது. நாட்டின் வளர்ச்சியில்லை. மார்ச் 8 வாரணாசி மக்கள் நல்ல முடிவை எடுக்க வேண்டும்'' என பேசினார்.
கூட்டத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், பா.ஜ., நிர்வாகிகள், தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
English summary:
Varanasi: UP to have to tell me the answer to the plundering of the country, in Varanasi, Modi spoke during the last phase of the election campaign.