
கேரளாவில் இடதுசாரிகள் மற்றும் பா.ஜ., ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் இடையே அடிக்கடி மோதல் நடந்து வருகிறது. ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் சிலர் கொல்லப்பட்டனர். இதனை கண்டித்து அங்கு போராட்டம் நடந்துள்ளது.
சிகிச்சை:
இந்நிலையில், நாடாபுரம் என்ற இடத்தில் ஆர்எஸ்எஸ் அலுவலகம் மீது மர்மநபர்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இதில் 4 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதேநேரத்தில் கோழிக்கோட்டில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் தீவைத்து எரிக்கப்பட்டது. பாலக்காட்டில் டி.ஓய்.எப்.ஐ., தொண்டர் ஒருவர் மர்ம நபர்களால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவங்கள் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.