பெங்களூரு: சிறையில் இருக்கும் சசிகலாவை தமிழக அமைச்சர்கள் இன்று சந்தித்து பேசினர். சென்னையில் ஏராளமான அரசுப் பணிகள் இருக்கும்போது, அவற்றை விட்டுவிட்டு, அரசு பொறுப்பில் இல்லாத சசிகலாவை அமைச்சர்கள் சந்தித்தது விமர்சனத்தை ஏற்படுத்தியிருக்கிறது.சொத்துக்குவிப்பு வழக்கில் பரப்பன அக்ரஹார சிறையில் சசி அடைக்கப்பட்டுள்ளார். இவரை சமீபத்தில் தினகரன் சந்தித்து வந்தார். இந்நிலையில் அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, காமராஜ் உள்ளிட்டோர் பெங்களூரு சென்றனர். அனுமதி பெற்று அமைச்சர்கள் சசியை சந்தித்து பேசினர். பொது செயலர் பதவிக்கு ஆபத்து வந்தால் ., அமைச்சர்கள் சசிகலாவுக்கு ஆப்பிள், திராட்சை, ஆரஞ்சு மற்றும் பாதாம், முந்திரி , பருப்புகள் வாங்கி சென்று கொடுத்தனர். அமைச்சர்கள் மதியம் 1.23 க்கு சிறைக்குள் சென்றனர். தொடர்ந்து 2.36க்கு வெளியே வந்தனர். பொது செயலர் பதவி செல்லாது என ஓ.பி.எஸ்., தரப்பில் தேர்தல் கமிஷனிடம் தாக்கல் செய்த மனுவில் சசிக்கு எதிராக தீர்ப்பு வந்தால் அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கலாம் என ஆலோசிக்கப்பட்டது. பொது செயலராக யாரை நியமிப்பது என்பதும் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
சிறை மாற்றும் முயற்சி : 90
சில நாட்கள் கழித்தே சிறை மாற்றம் குறித்து எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படும். அப்போது தமிழகத்திற்கு மாற்றுவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கலாம் எனவும் சசியிடம் அமைச்சர்கள் எடுத்துக்கூறியதாகவும் தெரிகிறது.
சிறை மாற்றும் முயற்சி : 90
சில நாட்கள் கழித்தே சிறை மாற்றம் குறித்து எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படும். அப்போது தமிழகத்திற்கு மாற்றுவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கலாம் எனவும் சசியிடம் அமைச்சர்கள் எடுத்துக்கூறியதாகவும் தெரிகிறது.