சென்னை: விமான படை வீரர்களின் சிறப்பான செயல்பாடுகளால் தேசம் பெருமிதம் கொள்வதாக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கூறினார். சென்னை தாம்பரம் விமானப்படை தளத்தில் நடந்த விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டார். இவ்விழாவில் இயந்திரவியல் பயிற்சி மையத்திற்கு பரிசு வழங்கினார். தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய விமானப்படை வீரர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தார். விமானப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார் இவ்விழாவில் தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ், அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்..
வல்லமையுடன்:
இந்த விழாவில் ஜனாதிபதி பேசியதாவது:நாட்டிற்காக அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வரும் வீரர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி இது. தாம்பரம் எந்திரவியல் பயிற்சி மையம் முழுமையாக தொழில்நுட்ப வசதிகளுடன் செயல்படுகிறது. இந்தியா வலிமையான நாடாக உயர்ந்துள்ளது. இந்திய ராணுவப்படைகள் எத்ததைய சூழலையும் சமாளிக்க கூடியவை. நாட்டின் வளர்ச்சிக்கு எதிரான சக்திகளை முறியடிக்க இந்திய படைகள் வல்லமையுடன் செயல்படுகிறது. பயங்கவரத ஊடுருவல்களை முறியடிக்க ராணுவம் முழு கவனம் செலுத்தி வருகிறது.
சிறந்தது:
இந்தியாவின் இறையாண்மையை பாதுகாப்பதில் விமானபடையின் பங்கு மிக முக்கியமானது.தொழில்நுட்பத்தில் விமானபடை சிறந்து விளங்குகிறது. பதன்கோட் தாக்குதலின் போது 125வது ஹெலிகாப்டர் பிரிவு சிறப்பாக செயல்பட்டது. விமான படை வீரர்களின் சிறப்பான செயல்பாடுகளால் தேசம் பெருமிதம் கொள்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
English summary:
Chennai: Air Force special operations, and the country was proud of the players, said President Pranab Mukherjee. Chennai, Tambaram Air Force base at a ceremony attended by President Pranab Mukherjee. Mechanical training center, presented the prize at the ceremony. Following airmen worked better was the recipient of the award. Guard of Honour on the occasion, the Air Force approved the Tamil Nadu Governor Vidyasagar Rao, Minister Jayakumar attended the meeting ..