புதுடில்லி: அமெரிக்காவில், இந்தியர்கள் தொடர்ந்து தாக்குத
ல் நடத்தும் நிலையில், அந்நாட்டிற்கு எதிராக பேச பிரதமர் மோடி பயப்படுவதாக காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் கூறினார்.
டில்லியில் நேற்று காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் ராகுல் பேசியதாவது: அமெரிக்காவில் இந்தியர்கள் தொடர்ச்சியாக தாக்கப்பட்டு வருகின்றனர். மோடி 56 இஞ்ச் மார்பு பற்றி பேசுகிறார். ஆனால், இந்திய இளைஞர்கள் கொல்லப்படும் போது பிரதமர் மவுனமாக இருப்பது ஏன்? அமெரிக்காவிற்கு எதிராக பேச பிரதமர் பயப்படுகிறார்.
நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகமாக உள்ளது. கடந்த வருடம் ஒரு லட்சம் பேர் வேலை பெற்றுள்ளனர். இந்த வருடம் யாருக்கும் வேலை வழங்கப்படவில்லை என அமைச்சர்கள் கூறியுள்ளனர்.
பிரதமர் மோடியும், டில்லி முதல்வர் கெஜ்ரிவாலும் தவறான வாக்குறுதி அளித்து மக்களை தவறாக வழிநடத்துகின்றனர். ஒரு நபரால் மட்டும் நாட்டையோ, நகரையோ மாற்ற முடியாது.
காங்கிரஸ் அரசுகள் மக்களின் குரல்களை மட்டும் தான் பிரதிபலிக்கின்றன. இவ்வாறு அவர் பேசினார்.
English Summary:
NEW DELHI: In the US, following the attacks on Indians in the country are afraid to speak out against Rahul, Modi said.