சென்னை: ஊழியர்கள் ஸ்டிரைக் காரணமாக தமிழகம், புதுவையில் வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டன. இதனால் ஒருபுறம் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட, போராட்டம் வெற்றி பெற்றதாக ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
10 லட்சம்...:
வாரத்தில் ஐந்து நாள் வேலை, செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பின் போது, வேலை செய்த ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை, அப்போது உயிர் இழந்த ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் உட்பட, பல கோரிக்கைகளை, வங்கி ஊழியர் சங்கங்கள் கூட்டமைப்பு வலியுறுத்தி வருகிறது. இதனை வலியுறுத்தி நாடு முழுவதும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.
கோஷம்:
தமிழகம், புதுவையில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்ட ஊழியர்கள் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பியும், பதாதைகள் ஏந்தியும் போராட்டம் நடத்தினர். இதனால் வங்கியில் பணம் போடுவது, எடுப்பது, செக் மாற்றுவது மற்றும் ஏடிஎம் சேவைகள் பாதிக்கப்பட்டன. இதனால் பொது மக்கள் பெரிதும் சிரமப்பட்டனர்.
வெற்றி...:
இது தொடர்பாக வங்கிகள் சங்கத்தின் பொது செயலாளர் வெங்கடாசலம் கூறுகையில், பொதுத்துறை வங்கிகளில் பொது மக்கள் ரூ.100 லட்சம் கோடி டிபாசிட் செய்துள்ளனர். வங்கிகள் தனியார் மயமாக்கப்பட்டால், பணம் தனியார் கைகளுக்கு தான் செல்லும். இன்றைய போராட்டம் காரணமாக 12 லட்சம் செக் பரிமாற்றம் பாதிக்கப்பட்டது. ரூ. 7 ஆயிரம் கோடி பணம் பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது. இன்றைய போராட்டம் வெற்றி பெற்றது. இவ்வாறு அவர் கூறினார். இதேபோல், இந்தியா முழுவதும் வங்கிகள் வேலை நிறுத்தம் காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டனர்.