மார்ச் : இன்று சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவின் முன்னேற்றத்திற்கு நாட்டு பெண்கள் அளப்பெரிய தொண்டுகளை புரிந்துள்ளனர் என்று பெண்களை வெகுவாக பாராட்டியுள்ளார்.
இன்று உலகம் முழுவதும் பெண்கள் சர்வதேச தினம் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வாழ்த்து செய்தியை வெளியிட்டுள்ளார். அந்த வாழ்த்து செய்தியில் இந்தியாவின் முன்னேற்றத்திற்கு நமது நாட்டு பெண்கள் அளப்பெரிய தொண்டுகளை புரிந்ததோடு தங்களை அர்ப்பணித்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
வாழ்த்துக்கள்:
இன்று சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி இந்திய பெண்மணிகளுக்கும் வெளிநாட்டு பெண்களுக்கும் எனது வாழ்த்துக்களை மனமாற தெரிவித்துக்கொள்கிறேன். பெண்கள் அதிகாரம் பெறுவதற்கும் நாட்டை முன்னேற்றம் அடையச் செய்வதிலும் பெண்கள் அதிக அளவு பங்கு பெறுவதற்கு வழிவகை செய்யும் வகையில் நாட்டில் சட்டத்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதோடு சட்டங்களும் இயற்றப்பட்டுள்ளன. பெண்கள் தங்களுடைய ஆசைபாசைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கும் அவர்கள் பாதுகாப்புக்காகவும் நாம் அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும். சமுதாயத்தில் பெண்கள் கன்னியமாகவும் சமுத்துவமாகவும் வாழ்வது அவர்களது உரிமையாகும்.
நாட்டில் பெண் குழந்தையாக இருந்தால் கருவிலேயே அழிப்பதை அடியோடு தடுத்து நிறுத்த வேண்டும். மேலும் பெண் குழந்தைகள் கல்வி பெற அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும். இந்திய நாட்டு பெண்கள் தங்களுடைய ஈவு இரக்கத்தாலும் கடுமையான உழைப்பாலும் பொறுமையாலும் நாட்டின் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றி வருகிறார்கள். பெண்களுக்கு சமத்துவம் அளிப்பதிலும் அதிகாரம் அளிப்பதிலும் இந்திய மக்கள் மீண்டும் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அந்த வாழ்த்து செய்தியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.