மும்பை: ஆசியாவின் மிகச்சிறந்த கடற்கரையாக அந்தமானில் உள்ள ராதாநகர் பீச் தேர்வாகி உள்ளது. சர்வதேச அளவில் சிறந்த கடற்கரை குறித்த டாப் 10 வரிசை பட்டியலை டிரிப் அட்வைசர் என்ற நிறுவனம் அறிவித்துள்ளது.
343 கடற்கரைகள் பரிசீலனை:
கடந்த 12 மாதங்களாக, தரம் மற்றும் சுற்றுலா பயணிகளின் கருத்து ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இந்த பட்டியல் தயார் செய்யப்பட்டு, வெளியிடப்பட்டுள்ளது. சிறந்த கடற்கரை குறித்த தேர்வுக்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 343 கடற்கரைகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. சர்வதேச அளவில் இந்த டாப் 10 பட்டியலில், இந்தியாவின், அந்தமானில் உள்ள ராதாநகர் பீச், 8 ம் இடத்தை பெற்றுள்ளது. பிரேசிலின், பையா டோ சன்சோபெர்னாட்டோ டி நோரோன்ஹா பீச் முதலிடத்தை பிடித்துள்ளது.
இந்தியாவிற்கு பெருமை:
அதேவேளையில், டிரிப் அட்வைசரின், ஆசிய அளவில் மிகச்சிறந்த கடற்கரைகளுக்கான பட்டியலில், அந்தமானின் ராதாநகர் பீச் முதலிடத்தை பெற்றுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் வொய்ட் பீச் இரண்டாம் இடத்தையும், மியான்மரில் உள்ள கப்பாலி பீச் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன. கோவாவின் அகோண்டா கடற்கரை பட்டிலில் 5 வது இடத்தில் உள்ளது. இந்த வகையில், ஆசியாவின் மிகச் சிறந்த டாப் 10 கடற்கரை பட்டியலில் இந்தியாவின் இரண்டு கடற்கரைகள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இயற்கை தந்த பரிசு:
இது குறித்து டிரிப் அட்வைசர் நிறுவனத்தின் இந்தியாவிற்கான மேலாளர் நிகில் கஞ்சு கூறுகையில், ‛டாப் 10 பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த இரண்டு கடற்கரைகள் இடம்பெற்றுள்ளது மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இந்தியாவின் இயற்கை அழகு இந்த பெருமையை வழங்கி உள்ளது,' என்றார்.
English Summary:
MUMBAI: Asia's best beach in the Andaman Beach Radhanagar is selected. The Top 10 ranking lists of the best beaches on the international level, the company announced Trip Advisor.